RJ பாலாஜி இயக்கத்தில்
சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பாராட்டி நடிகர் கார்த்தி X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் படக்குழுவினரை குறிப்பிட்ட கார்த்தி, சூர்யாவின் பெயரை குறிப்பிடாமல் 'கருப்பா... இதுக்கு மேல என்ன வேண்டும்?' என்று பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்த
சூர்யா, "என் பெயர் எங்கப்பா?" என கிண்டலாகக் கேட்க, அதற்கு ஆர்ஜே பாலாஜி "கருப்பான்னு யாரை சொல்லியிருக்கார் சார்?" என பதிலளித்துள்ள இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.