டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய் நவம்பர் 24 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் தனது சமூக வலைதளப் பதிவில் இதனைத் தெரிவித்து, நீதிபதி சூர்யகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.