இந்திய
கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவை நீக்கி, ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையில்
இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது சமீபத்திய பேட்டிங் பார்ம் மற்றும் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான நீண்டகால அணுகுமுறையும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.