த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு

36பார்த்தது
த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு
2026 சட்டமன்றத் தேர்தலில் கோபி தொகுதியில் த.வெ.க வேட்பாளராகக் களமிறங்கும் கே.ஏ.செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தில் குளறுபடி மற்றும் புதிய வீட்டிற்கு வருமான வரி கட்டவில்லை என அதிமுகவினர் அளித்த புகாரால் இவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று தேர்தல் அதிகாரி மனுவை ஏற்றுக்கொண்டார். இத்தொகுதியில் இவர் 9வது முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி