தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து வரும் 4ஆம் தேதி தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கோரி கட்சி நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.