சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெற்றிபெற்ற 108 எம்.எல்.ஏக்களும் இங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவராக இங்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர். தவெக ஆட்சி அமைக்கும் வரை இவர்கள் இங்கு தங்கவைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மேலும் இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.