இந்திய அணி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெறாது என அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தவிர்த்து பிற ஆட்டங்களில், பேட்டிங்கில் இந்தியா சொதப்பியதாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா நன்றாக விளையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.