T20 WC: முதல் அணியாக 200+ ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து

46பார்த்தது
T20 WC: முதல் அணியாக 200+ ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இத்தாலி–ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இத்தாலி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்சே, மைக்கேல் ஜோன்ஸ் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தனர். ஜார்ஜ் 84 ரன்களும், ஜோன்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பிராண்டன் மெக்முல்லன் 41, மைக்கேல் லீஸ்க் 22 ரன்கள் எடுத்ததால், ஸ்காட்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்து 200+ ரன் சாதனை படைத்தது.

தொடர்புடைய செய்தி