மழையால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ரத்தானதால் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இதனால் உலகக் கோப்பை ‘பி’ பிரிவில் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஒரே ஒரு ஆட்டம் மட்டும் எஞ்சிய நிலையில் ஆஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் இருப்பதால் தொடரிலிருந்து வெளியேறியது. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.