10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (பிப்.19) நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், இது அவர்களின் கடைசி ஆட்டமாகும்.