டி20 உலகக் கோப்பை.. ஓமன் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி

6483பார்த்தது
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று (பிப்.12) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 225/5 ரன்கள் எடுத்தது. இதில், தசுன் சானக்க 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து 50 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
 
நன்றி: starsports

தொடர்புடைய செய்தி