டி20 உலகக் கோப்பை 2026 இன்று (பிப்.7) மும்பையில் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பையில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதுவரை 35 போட்டிகளில் 1,292 ரன்கள் குவித்து 'ரன் மெஷினாக'த் திகழ்கிறார். குறிப்பாக, 2014 மற்றும் 2016 என இருமுறை தொடர் நாயகன் விருது வென்றதுடன், 2024 இறுதிப்போட்டியில் 76 ரன்கள் விளாசி இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.