இந்திய பங்கு சந்தை மதிப்பை முந்தியது தைவான்

18பார்த்தது
இந்திய பங்கு சந்தை மதிப்பை முந்தியது தைவான்
உலகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான டிஎஸ்எம்சி (TSMC) பங்குகளின் விலை இந்த ஆண்டில் 49% வரை தாறுமாறாக உயர்ந்ததை அடுத்து, இந்திய பங்கு சந்தை மதிப்பை முந்தி உலகின் 5-வது மிகப்பெரிய பங்கு சந்தையாக தைவான் உருவெடுத்துள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப புரட்சியால் தைவானின் சந்தை மதிப்பு 4.95 ட்ரில்லியன் டாலராக உயர்ந்த வேளையில், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதால் இந்தியாவின் மதிப்பு 4.92 ட்ரில்லியன் டாலராக சற்றே சரிந்துள்ளது.