சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஊடகங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பேட்டி எடுக்கவும், நேரலை செய்யவும் வேண்டும். உயர் பாதுகாப்பு வளைய பகுதிகளுக்குள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால், ஊடகத்தினர் ஒரு மாதம் சுப்ரீம் கோர்ட்டின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.