கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (மே.29) நடைபெற்றது. அப்போது, “விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சூலூர் சிறுமி வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.