தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது

1403பார்த்தது
தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது
தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06037), மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். 21 அம்ரித் பாரத் ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி