தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.13) நடைபெற்றது. அதில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே மிகவும் துடிப்பான சினிமா துறை தமிழ் சினிமா தான் என்றும், உங்களில் ஒருவனாக இந்த மேடையில் நிற்பது நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியது போன்ற உணர்வை தருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.