தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த பாபு இன்று (அக்.11) உடல் நலக்குறைவால் காலமானார். ரஜினிகாந்த், S.P.முத்துராமன் கூட்டணியில் உருவான பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளராக பாபு பணியாற்றியுள்ளார். முரட்டுக்காளை, கழுகு, பாயும் புலி, போக்கிரி ராஜா மற்றும் கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் போன்ற பல படங்களில் இவர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.