காசிக்கும் ராமேஸ்வரத்திற்குமான ஆன்மீக தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இன்று (டிச.30) நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் உரையாற்றிய அவர், "உலகின் மிக மூத்த மற்றும் அழகான மொழியான தமிழின் பெருமையை உலகறிய செய்ய பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளை போல வேறு யாரும் செய்ததில்லை" என சூட்டிக்காட்டியுள்ளார்.