தமிழகத்தில் தமிழ் வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 2026 பொறியியல் கலந்தாய்வு முடிவுகளின்படி, 11 கல்லூரிகளில் உள்ள 353 தமிழ் வழி சிவில் பொறியியல் இடங்களில் 300 மட்டுமே நிரம்பியுள்ளன; 53 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், 13 கல்லூரிகளில் உள்ள 416 மெக்கானிக்கல் இடங்களில் 267 நிரம்பி, 149 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு மாறாக, ஆங்கில வழி பொறியியல் படிப்புகளில் 80%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.