சென்னை: “அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளது” என
திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார். மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதைபோல் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு பதவியேற்பு விழா சான்று. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதற்கு
திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்றார்.