தமிழகத்தில் முதலமைச்சர்
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே.21) 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3 ஆவதாக பாடப்பட்டது. இதற்கு
திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. 'இனி அவ்வாறு நடக்காது' என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.