ஏப்ரல் 20-க்கு மேல் தமிழக சட்டமன்ற தேர்தல்?

75பார்த்தது
ஏப்ரல் 20-க்கு மேல் தமிழக சட்டமன்ற தேர்தல்?
தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே, ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம், மேற்குவங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி