தமிழக சட்டசபை தேர்தல்: திமுக தொகுதி பங்கீடு குழு அமைப்பு

3085பார்த்தது
தமிழக சட்டசபை தேர்தல்: திமுக தொகுதி பங்கீடு குழு அமைப்பு
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார். இக்குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.