2026 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில்
திமுக கூட்டணிக்குத் தமிழக ஆயர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, "மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்; சிறு கட்சிகளுக்கு வாக்களித்து வாக்குகளைச் சிதறடித்து அவர்கள் வளர இடமளிக்கக் கூடாது. ஒருவர் கிறிஸ்தவர் என்பதற்காக மட்டும் ஆதரிக்காமல், கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிக்க வேண்டும்" என ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.