தமிழக பாஜக, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேலாண்மைக் குழுவை அமைத்தது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் உள்ளனர். இதுகுறித்து நயினார் வெளியிட்ட அறிக்கையில், “நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.