2026-27-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் தொழில் துறைக்கு ரூ,4,882 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க 12 புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள தொழிற் பூங்காக்கள் மற்றும் நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 25,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.