தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொருளாதார தொலைநோக்கு பார்வையை அரசு இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமை உள்ள நிலையில், இலவசத் திட்டங்கள் மற்றும் கடன் தள்ளுபடிகள் நிலையான வேலைவாய்ப்பையோ தொழில் வளர்ச்சியையோ உருவாக்காது என கூறியுள்ளார்.