லண்டன் சென்றுள்ள முதலமைச்சர்
விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே ரசிகர்கள் திரண்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி லண்டன் போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். முதலமைச்சர் விஜய்யுடன் சென்றுள்ள பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ் ஐபிஎஸ்-ம் மக்களிடம் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். விஜய்யை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.