தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதலமைச்சர்
விஜய் நாளை (மே.23) டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.