தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து மாலைக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.