தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அமலாக்கத்துறையின் தலைமை அலுவலக இயக்கநர் ராகுல் நவீன் சென்னை வருகை தந்துள்ளார். தமிழக அமலாக்கத்துறை வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இயக்குநர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.