"முதலமைச்சர்
விஜய், தேர்தலின்போது அளித்த விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா?" என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது தொடர்பாக அரசு தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எப்போது, எந்த வகையில் நிறைவேற்றப்படும் என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.