தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 23-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக 11,323 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று (ஏப்.21) மாலை முதல் 23-ம் தேதி பிற்பகல் வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 6,234 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மக்கள் நெரிசலின்றி பயணம் செய்து ஜனநாயக கடமையாற்ற ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.