தமிழக வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தவணை செலுத்த தவறியவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2015 மார்ச் 31-க்கு முன் தவணை காலம் முடிந்த திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த சலுகை, வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். ஏழை, எளிய மக்களின் கடன் சுமையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.