பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகையும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ரொக்கத் தொகையானது ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று (ஜன.01) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கார்டுகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கினால், அரசுக்கு ரூ.6,817 கோடி செலவாகும். என கணக்கிடப்பட்டுள்ளது.