தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று (பிப்.13) மாலை நடைபெற்றது. அதில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' (2020) படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.