தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுகால தூய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.1,500-லிருந்து ரூ.7,367 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜன.20) வெளியிட்டார். ஏற்கனவே 978 பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1,575 பேருக்கும் எதிர்காலத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.