தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடியும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீர்வளத்துறை செயலாளராக சத்யபிரதா சாகுவும், சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக சமீரனும் நியமிக்கப்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.