அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, மக்கள் வாட்ஸ்-ஆப் மூலம் பெறும் வகையில் தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி, ரேஷன் கார்டு, மெட்ரோ டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் இனி பெறலாம் என கூறப்படுகிறது.