தமிழக அரசு உணவு டெலிவரி தொழிலாளர்களுக்காக காப்பீடு திட்டம் மற்றும் ஓய்வு அறைகளைத் தொடர்ந்து, தற்போது 2000 பேருக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.