பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்று மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை எவ்விதத் தடையுமின்றி சிபிஐ வசம் முழுமையாகச் செல்வது உறுதியாகியுள்ளது.