மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடங்கிவைக்கப்பட்ட டாடா LR ஆலையில் சொகுசு கார்கள் தயாரிக்கப்படவுள்ளன என்றும், உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டுக்கு உண்டு என்றும் அவர் கூறினார். சீரான, பரவலான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.