“தமிழ்நாட்டில் தண்ணீரே இல்லாமல் திவால் ஆகப்போகிறது; நிலத்தடி நீரை பாதுகாக்காமல் விட்டதே காரணம்” என தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் இன்று (மார்ச் 3) பேசிய அவர், “தமிழ்நாட்டில் தண்ணீர் திவால் ஆக போகுது, மணல் திவால் ஆக போகுது, கனிமவளம் திவால் ஆகப் போகுது, மொத்தத்துல உங்க ஆட்சியில தமிழ்நாடே திவால் ஆக போகுது” என விமர்சித்துள்ளார்.