தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான MBBS மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு NEET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பதிவாகியுள்ளதால், கடந்த ஆண்டைவிட கட்-ஆஃப் 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரக்கூடும் என கல்வி வல்லுநர்கள் கணித்துள்ளனர்.