தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளாவில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு,
பாஜக மாநில முன்னாள் தலைவர்
அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (நவ.12) வெளியிட்ட அறிக்கையில், “திமுகவின்
இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், தமிழகப் பதிவெண் கொண்ட சுமார் 100 ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டு, சுமார் 2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, கேரள, கர்நாடக மாநில அரசுகளோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என வலியுறுத்தினார்.