தமிழ்நாட்டை சேர்ந்த 30 ஆம்னி பேருந்துகளுக்கு கேரளாவில் ஒரே நேரத்தில் ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆம்னி பேருந்துகளில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லை என அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று (நவ.8) மாலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கேரளாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதா அல்லது நிறுத்துவதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.