திமுக அரசு மகளிருக்கு ரூ.5,000 வழங்கியிருப்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு மாய்மாலவித்தை தானேதவிர வேறொன்றும் இல்லை என்று சசிகலா விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றது முதல் மக்களை கசக்கி பிழிந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டு தற்போது தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மக்களை குறைத்து எடைபோட்டால் கடைசியில் ஏமாறப்போவது திமுகவினர்தான்' என குறிப்பிட்டுள்ளார்.