பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்

30பார்த்தது
பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்
கல்வி, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்து, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டுகிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தற்போது பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுக்க 162 புதிய பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.