அறிவியல், ஆராய்ச்சி வெளியீடுகளில் தமிழ்நாடு முதலிடம்

3பார்த்தது
அறிவியல், ஆராய்ச்சி வெளியீடுகளில் தமிழ்நாடு முதலிடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தரவரிசைப் பட்டியலில், 2024-25ஆம் ஆண்டுக்கான ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் காப்புரிமை விண்ணப்பங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆராய்ச்சி வெளியீடுகளில் தமிழ்நாடு 44,611 பதிவுகளுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் 29,298 பதிவுகளுடன் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா 28,947 பதிவுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. காப்புரிமை விண்ணப்பங்களிலும் தமிழ்நாடு 16,048 விண்ணப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி